• Featured

    கறுப்பு ஜூலை: கட்டமைக்கப்பட்ட ‘மீட்பு’க் கதையாடல்களுக்கு அப்பால் | சஞ்சுலா பீட்டர்ஸ்

    கட்டுரை | சஞ்சுலா பீட்டர்ஸ் | படம் | இணையம் | மொழியாக்கம் | அருள்கார்க்கி  1983 ஜூலையின் இரத்தம் தோய்ந்த நிகழ்வுகள் ‘ஜூலை கலவரங்கள்’ அல்லது ‘இனக்கலவரங்கள்’ என வர்ணிக்கப்பட்டு நான்கு தசாப்தங்களுக்கும் மேல் கடந்துவிட்ட போதிலும், இன்றுவரை நீதி மறுக்கப்பட்ட அந்த கொடூரமான நாட்களைக் குறித்து எழுத வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்னும் இருக்கிறோம். நாம் எழுதுவது ‘இன பதற்றங்கள்’ அல்லது ‘இனக்கலவரங்கள்’ என்று சொல்லப்படும் மங்கிய புலம்பல்களைப் பற்றியல்ல; மாறாக, அவை ஏற்படுத்திய மரண அவலங்களையும், கற்பனை செய்ய முடியாத…

    Read More »
  • Featured

    கறுப்பு ஜூலை: சில நினைவுகள்

    கட்டுரை | ஜெரா | படம் |The Island 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிராக சிங்கள காடையர்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். அரசு எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முயற்சிக்காத இதனை “ஜூலை கலவரம்” என அடையாளப்படுத்தினாலும், இங்கு உண்மையில் நடந்திருப்பது இனச்சுத்திகரிப்பாகும். கொழும்பு உள்ளிட்ட இலங்கையின் தலைநகர் பகுதி தொடக்கம் நாட்டின் தெற்கு பாகத்திலிருந்து அனைத்து தமிழர்களும் இலக்கு வைத்து தாக்கி படுகொலை செய்யப்பட்டனர். 3000 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலையானார்கள்.…

    Read More »
  • Featured

    எல் நினோ தாக்கமும் இலங்கை எதிர்கொள்ளும் காலநிலை அனர்த்தங்களும்

    கட்டுரை | அருள்கார்க்கி | படம் | Pexels உலகளாவிய ரீதியில் பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் அசாதாரண வெப்பநிலைப் பரவல், மனித வரலாற்றின் மிகக் கொடிய காலநிலை நெருக்கடிகளைத் தோற்றுவிக்கும் உந்துசக்தியாக மாறியிருக்கின்றது. புவி வெப்பமயமாதலின் தீவிரமடைதலுடன், எல் நினோ-தென்னக அலைவு (ENSO – El Niño Southern Oscillation) எனப்படும் இந்த இயற்கை நிகழ்வு, தற்போது வெறுமனே ஒரு பருவகால மாற்றமாக அன்றி, வளரும் நாடுகளின் தேசிய பொருளாதாரங்களையும் சமூகக் கட்டமைப்புகளையும் சிதைக்கும் பேரழிவாக உருவெடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் மூலோபாய மையப்பகுதியில் அமைந்துள்ள…

    Read More »
  • Featured

    துயர நாட்களின் வலிமிகு இழப்பு | வேல்விழி

    கட்டுரை | வேல்விழி | படம் |Tamilnet “இஞ்சரப்பா சுதா ரீச்சரையெல்லே மா லைனிலை கண்டனான். எங்க, கதைக்கவும் நேரமில்லை. ஆனா, பெடிக்கு காலிலை காயமாமப்பா. பாவம், சின்னப்பிள்ளை”. “என்னப்பா சொல்லுறியள்..? பெட்டைக்கோ பெடியனுக்கோ…?” “ரெண்டாவது பெடியனுக்கு.. முந்தநாளடிச்ச செல்லிலை காலிலை எலும்பு முறிஞ்சுபோச்சாம்”. “ஐய்யோ..வெறும் பச்சை மண்ணப்பா அது. ஒரு வயசு கூட ஆகியிருக்காது. ஒம்பது மாசம் தான் வருமெண்டு நினைக்கிறன்.” “ம்ம்… நாளைக்கு காயக்காறரை ஏத்தவாற ஐ.சி.ஆர்.சி கப்பலிலை ஏத்தப்போகினமாம். அங்கால புல்மோட்டைக்கு கொண்டுபோய்த்தான் வைத்தியம் செய்யோணுமாம்.” “ஆரோட அனுப்பப்போகினமாம்?” “ரீச்சரோட…

    Read More »
  • Featured

    அமெரிக்காவின் புதிய அரசியல் ஒழுங்கும் உலகளாவிய காலநிலை நெருக்கடியும்

    கட்டுரை | அருள்கார்க்கி  | படம் | Devon Chandler from Pixabay அறிமுகம் அமெரிக்க நிருவாகத்தின் தற்போதைய கொள்கை மாற்றங்கள், உலகளாவிய காலநிலை விவாதத்தை ஒரு முக்கிய திருப்புமுனைக்கு இட்டுச் சென்றுள்ளன. குறிப்பாக, 2026 ஆம் ஆண்டு அமெரிக்கா மீண்டும் பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியமை, சர்வதேச அளவில் காலநிலை நீதி மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான உரையாடல்களைப் பலவீனப்படுத்தியுள்ளது. முன்னைய காலங்களில் ‘காலநிலை மாற்றம் என்பது ஒரு கற்பனை’ என்று வாதிட்ட மறுப்புவாதிகள், இன்று நவீன அரசியல் மற்றும் பொருளாதாரத் தரவுகளைக்…

    Read More »
  • Featured

    இன்னும் திறக்கப்படாத முப்பத்தொரு வருட சிறை வாழ்க்கை | ஜெரா

    கட்டுரை | படங்கள் | ஜெரா முன்குறிப்பு: 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி, இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்டார் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்கினேஸ்வரநாதன் பார்த்திபன் அவர்கள், கடந்த 31 வருடங்களாகத் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான இவரை மீட்பதற்காக அவர்தம் குடும்பத்தார் நடத்தும் கண்ணீர் ததும்பும் போராட்டம் பற்றிய கட்டுரை இது.  யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு அடையாளமான நல்லூர் கந்தசாமி கோயிலின் மணியோசை கேட்கும் தொலைவில் உள்ள இடத்தில்தான்…

    Read More »
  • Featured

    காலநிலையை சிதைக்கும் AI தரவு மையங்கள் | அருள்கார்க்கி

    கட்டுரை | அருள்கார்க்கி | படம் | CNN உலகையே வியக்க வைக்கும் வகையில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம், இன்று பூமியின் எதிர்காலத்திற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் மனித வாழ்வை எளிதாக்கும் கண்டுபிடிப்பாக இது பார்க்கப்பட்டாலும், மறுபுறம் காலநிலை மாற்றம் (Climate Change) மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையில் இது ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிர்ச்சியளிக்கின்றன. Sam Altman-இன் கணிப்பும் யதார்த்தமும்   செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி குறித்து இன்று உலகம் பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் ஆபத்துகள் குறித்த…

    Read More »
  • Featured

    ஈழத்தமிழர்களை அழிக்க கொட்டிக்கொடுத்த இஸ்ரேல் – பாகம் 02

    கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை பேரினவாத அரசு இஸ்ரேலுடன் இணைவுடன் உருவாக்கிய விசேட அதிரடிப் படை குறித்து எச்சரிக்கப்பட்டமை தொடர்பிலும், எனினும் – அதனைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கைகளை தொடர்வதில் காணப்பட்ட நிலைப்பாடுகள் குறித்தும் பகிரப்பட்ட தகவல்கள் வருமாறு: 1987 மார்ச் 18: ‘இஸ்ரேல் உள்ளுர் இராணுவத்துடன் உறவைத்தொடர அனுமதிக்கப்படுகின்றது. எனினும் விசேட அதிரடிப் படைக்கு உதவுவது என்பது குறுகியகாலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சந்தேகத்திற்கிடமான முதலீடாகும். இது பாரதூரமான, அதேவேளை நீண்டகாலத்திற்கான பாரிய தவறுமாகும். ஒருவேளை அரசியல் மாற்றம் ஏற்பட்டு இலங்கை ஜனாதிபதியும் அவரது மகனும்…

    Read More »
  • Featured

    ஈழத்தமிழருக்கு எதிரான போரில் இஸ்ரேலின் பங்கு – பாகம் 01

    கட்டுரை | கேஷாயினி எட்மண்ட் இலங்கை அரசிற்கும் இஸ்ரேலுக்குமான அதிகாரபூர்வ தொடர்பு 1950ஆம் ஆண்டுகளில் உருவானதொன்று. இதன் வெளிப்பாடாக 1956 இல் இலங்கையின் கொழும்பில் இஸ்ரேல் தூதரகம் திறக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாகின. எனினும் ஆரம்பத்தில் வெறும் தூதரக உறவுகள் ( Diplomatic Relations) மட்டுமே இரு நாடுகளும் கொண்டிருந்தன. மேலும் அக்காலப்பகுதியில் இஸ்ரேல் விவசாயம் மற்றும் நீர்வள மேலாண்மையில் நிபுணத்துவமும் அனுபவமுள்ள நாடாக விளங்கியது. இதனனடிப்படையில் இலங்கைக்கு நவீன விவசாய முறைகள், நீர்ப்பாசன தொழில்நுட்பங்கள் (Irrigation Techques) உலர் நிலங்களில் பயிரிடும் முறைகள் தொடர்பான…

    Read More »
  • Featured

    பேரிடர் கால இடப்பெயர்வு: தங்குமிடக் குறைபாடுகளும் பெண்களின் பாதுகாப்பும்

    அருள்கார்க்கி | கொள்கை ஆய்வாளர் | Infograph | nenarrative அறிமுகம் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘டிட்வா’ (Cyclone Ditwah) புயல், 2025 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நாட்டின் சமூக-பொருளாதாரக் கட்டமைப்பில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இந்த அனர்த்தம் தோற்றுவித்த கடும் மழைவீழ்ச்சி, முன்னெப்பொழுதும் இல்லாத அளவிலான நிலச்சரிவுகளையும் வெள்ளப்பெருக்கையும் உருவாக்கியது. ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் 2026 பெப்ரவரி மாதத்திற்கான அறிக்கை…

    Read More »
Back to top button